பூனைகள் பற்றி இஸ்லாமும், இஸ்லாமிய கருத்தில் விஞ்ஞானமும்


உள்ளடக்கம்
===========
இஸ்லாமிய பார்வை
அறிவியலும் மருத்துவமும்


WRITE YOUR COMMENTS


இஸ்லாமிய பார்வை
====================
01) நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பூனையை வைத்து வியாபாரம் செய்வதை தடுத்தார்கள்.

02) பூனையின் எச்சி பட்ட தண்ணீர் அசுத்தமாகாது. மேலும் பூனையின் கால் பட்ட தண்ணீரும் அசுத்தமாகாது.

03) பூனை உட்கார்ந்த இடத்தில் நாம் தொழலாம். அந்த இடம் சுத்தமானதே.

04) இப்படி இருக்க அரபு நாடுகளில் இன்றும் பெரும்பாலான வீடுகளில் பூனைகளை வளர்க்கிறார்கள்.

மிகப் பிரபல்யமான ஸஹாபி அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் எப்பொழுதும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூடவே இருப்பார்கள். அதே சமயத்தில் அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் இருக்கும் ஒரு பையில் எப்பொழுதும் ஒரு குட்டி ஆண் பூனை இருக்கும். அந்தப் பூனை அவர்களை விட்டும் எங்கும் செல்லாது, சென்றாலும் மீண்டும் அவர்களிடமே வந்து விடும். அந்த அளவு பூனையிடம் மிகுந்த பாசம் வைத்திருந்தார்கள். அதற்க்குத் தேவையான உணவும் தண்ணீரும் அவ்வப்பொழுது வழங்குவார்கள்.

அவர்களிடம் அக் குட்டிப் பூனை எப்பொழுதும் இருப்பதனால் தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பூனைகளின் தந்தை என பொருள் வரும் படி அபூ ஹுரைரா என்று அழைத்தார்கள். அவர்களின் அந்தப் பெயரே கியாம நாள் வரை நிலைத்து விட்டது.

அரபியில் ஹிர்ரா என்றால் ஆண் பூனை என்றும், ஹுரைரா என்றால் குட்டி ஆண் பூனை என்றும் அர்த்தமாகும்.

பூனைகளை வீட்டில் வளர்க்க இஸ்லாம் அனுமதுயளித்துள்ளது. ஆனால் ஒரே ஒரு நிபந்தனை: அவ்வாறு வளர்க்கும் பூனையை சுதந்திரமாக விட்டு விட வேண்டும். இதை கட்டிவைத்தோ அல்லது அறையிலோ அல்லலது கூண்டிலோ வைத்து வளர்க்க அனுமதியில்லை. அதை வீட்டுக்குள் சுதந்திரமாக எப்பொழுது வேண்டுமானாலும் வந்து போக அனுமதிக்கலாம்.

வெளியில் இரை கிடைக்காமல் வீட்டிற்குல் நுளைந்தால் உணவும், தண்ணீரும் கொடுக்கலாம்.

எனவே நபி ஸல்லல்லலாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மற்ற பிராணிகளுக்கு கொடுக்காத சலுகையை, பிரியத்தை ஏன் பூனைக்கு மாத்திரம் கொடுத்தார்கள் என்று ஆராயாமல் நாம் சும்மா இருந்து விடுவோம். ஆனால் விஞ்ஞானிகள் சும்மா விடுவார்களா? இதை ஆய்வு செய்தார்கள்.

அறிவியலும் மருத்துவமும்
==========================
பூனையானது ஒரு வித உறுமலை (Cat Purr) வெளிபடுத்தி கொண்டே இருக்கும். அந்த உறுமலானாது ஒரு வித அதிர்வலைகளை வெளியீடுகிறது. அந்த அதிர்வலைகளின் அளவு அதிகபட்சமாக 20 Herz முதல் 140 Herz வரை இருப்பதாக கூறுகிறார்கள்.

அந்த அதிர்வலைகள் மனிதன் மீது படும் பொழுது அவன் உடலில் எண்ணற்ற மாற்றங்கள் ஏற்படுவதாக ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

01) மன்தனின் இதயத்தில் மற்றும் மூளையில் அதிக இருக்கம், அழுத்தம் இருந்தால் அவைகள் அவ்வதிர்வலைகள் மூலம் சரியான நிலைக்கு வருகிறது.

02) பூனை வளர்ப்பவர்கள் மாரடைப்பு வருவதை விட்டும் 40 சதவீதம் பாதுக்காக்கப் படுகிறார்கள். அதாவது பூனை வளர்ப்பவர்களுங்கு ஹார்ட் அட்டாக் பெரும் பாலும் வருவதில்லை.

03) உடலில் ஏதாவது காயம் ஏற்பட்டிருந்தால் அவைகள் பூனையின் அதிர்வலை காரணமாக வேகமாகக் குணமடையும்.

04) சதை பிடிப்பு, சதை வலுவிழந்து இருந்தால்: சதை பிடிப்பு நீங்கி சதை வலுவடையும்.

05) மூச்சு திணறல் உள்ளவர்கள் பூனை வளர்த்தால் மூச்சு திணறல் நீங்கும்.

06) குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள் பூனை வளர்த்தால் அதன் அதிர்வலையின் காரணமாக இரத்த அழுத்தம் சீராகும்.

07) பூனை வளர்ப்பவர்களின் எலும்பு வலுவடையும். மேலும் எலும்பு முறிவு ஏற்பட்டவர்களுக்கு பூனையின் அதிவர்லையின் காரணத்தால் எலும்பு சீக்கிரம் இணைந்து குணமாகும்.

08உடலில் ஏதாவது ஒரு வலி இருந்தால் அவ்வலிகள் பூனையை வளர்ப்பதால் வலி குணமாகும்.

என்ன ஒரு ஆச்சிரியம் பூனையின் அதிர்வலைகள் மிகுந்த மருந்துவ பலனை கொடுப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

ஆனால் அன்றே நபி ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மனிதனுக்கு நன்மையை தரக்கூடிய பூனை வளரப்பை ஆதரித்தும் அதை வீட்டில் உள்ளே வருவதை அனுமதித்துள்ளார்கள்.

எனவே இத்தனை நன்மைகளைத் தரும் பூனை இனத்தை பாதுகாப்போம். மேலும் இவைகளைப் போன்று இறைவனின் அனைத்துப் படைப்புகளும் ஏதோ ஒரு வகையில் மனிதனுக்கு நன்மை பயல் வைக்கக் கூடியதாக இருக்கும் என்பதை உணர்ந்து செயற்படுவோம்.

எல்லாம் வல்ல இறைவன் நம் அத்தனை பேர்களுக்கும் அருள் புரிவானாக ஆமீன்.....