மனிதனுடைய வால் எலும்பு பற்றிய அறிவியல் உண்மைகள்
==================



WRITE YOUR COMMENTS

السلام عليكم ورحمةالله وبركاته

அல்லாஹ் அல்குர்ஆனில் பல இடங்களில் நீங்கள் மரணித்த பின் மீண்டும் உங்களை நாம் உயிர்ப்பிப்போம்.. என்று கூறுகிறான். இதை நாம் சற்று சிந்தித்தால்...

மனிதன் மரணித்து  அவன் மண்ணோடு மண்ணாகி முற்று முழுவதுமாக அழிந்த போகிறான்.இவ்வாறு இருக்கையில் மீண்டும் எவ்வாறு உயிர்ப்பிக்கப்படுவான்..? என்ற கேள்வி நம் அனைவரது உள்ளத்திலும் எழும்.

ஆம்...! அது எவ்வாறு சாத்தியமாகும் என்பதை பார்ப்போம்..

ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரழி) அறிவிக்கன்றார்கள்..:

كُلَّ ابنِ آدَمَ تأكُلُ الأرضُ إلّا عَجْبَ الذَّنَبِ؛ منه خُلِقَ، وفيه يُركَّبُ.

ஆதமுடைய மகன் ஒவ்வொருவரினதும் வால் எலும்பை தவிர ஏனையவைகளை இந்த பூமி சாப்பிடும். அதிலிருந்தே அவன்படைக்கப்பட்டான். அதனாலேயே அவன் மீண்டும் எழுப்பப்படுவான்.

நூற்கள்:புஹாரி 4935
முஸ்லிம் 2955

சுமார் 1440 வருடங்களுக்கு முன்பு எழுத வாசிக்க தெரியாத, பைத்தியகாரர், சூனியகாரர் என்றேல்லாம் கூறப்பட்ட எம் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் வஹியைக் கொண்டு கூறிய இக்கருத்தை உலகம் ஏற்க மறுத்தது. அதனால் 18ம் 19ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த மிகப்பெரிய ஜேர்மனிய விஞ்ஞானியான Hans Spemann (1869-1941 ) என்பவர் அக்கருத்திற்கு ஒரு சவாலாக அதனை ஆய்வு செய்ய ஆரம்பித்தார்.சுமார் இரண்டு வருட தன் ஆய்வில் தோல்வியை தான அவர் அடைந்தார்.பின் நபியவர்களின் இக்கூற்றை அவர் ஏற்றுக்கொண்டார்.

Hans Spemann (1869-1941 )
ஒரு மனிதன் பிறந்து வளர்ந்து இறக்கும் வரை தான் அவனின் உடலிலுள்ள அனைத்தும் தொழிற்படும்.அவன் இறந்து விட்டால் எல்லா தொழிற்பாடுகளும் நின்று விடுவதுடன் அனைத்து கலங்களும் இறந்தும் விடுகின்றன. ஆனால் மனிதனின் முள்ளந்தண்டெலும்பின் மிக கீழ் பகுதியிலிருக்கும் வால் எலும்பு (Tailbone/Coccyx) எனப்படும் எலும்பு மாத்திரம் அழியாமல் அப்படியே இருக்கின்றது என்றால் எவ்வளவு அற்புதம்...!

سُبْحَانَ ٱللَّٰهِ

அதனை எதன் மூலமும் அழிக்க முடியாது என்பதை தற்காலத்தில் தான் விஞ்ஞானம் கண்டுபிடித்துள்ளது. அதாவது எந்த நச்சுப்பொருட்களை ஊற்றினாலும் சரி.. அல்லது அதி கூடிய வெப்பத்தில் சூடேற்றினாலும் சரி.. அந்த எலும்பு எவ்வித மாற்றத்திற்கும் உட்படாது.

அல்லாஹ் அல்குர்ஆனில் கூறுகிறான்....

 سَنُرِيهِمْ آيَاتِنَا فِي الْآفَاقِ وَفِي أَنْفُسِهِمْ حَتَّىٰ يَتَبَيَّنَ لَهُم أَنَّهُ الْحَقُّ ۗ أَوَلَمْ يَكْفِ بِرَبِّكَ أَنَّهُ عَلَىٰ كُلِّ شَيْءٍ شَهِيد

(سورة فصلت ٥٣)

நிச்சயமாக (இவ்வேதம்) உண்மையானது தான் என்று அவர்களுக்குத் தெளிவாகும் பொருட்டு நம்முடைய அத்தாட்சிகளை (உலகத்தின்) பல கோணங்களிலும், அவர்களுக்குள்ளேயும் சீக்கிரமே நாம் அவர்களுக்குக் காண்பிப்போம் (நபியே!) உம் இறைவன் நிச்சயமாக எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது உமக்குப் போதுமானதாக இல்லையா?

(சூரா புஸ்ஸிலத் : 53)

அல்லாஹ் எல்லா கோணத்திலும் தனது அத்தாட்சிகளை அகிலத்தாருக்கு காட்டிக்கொண்டே தான் இருக்கின்றான் அல்ஹம்துலில்லாஹ்...

உங்களுடைய கருத்துக்கள்