துருக்கி அதிபர் அர்துகான்
============================
============================
எந்தஒரு முஸ்லிமின் வலியையும் என்னால் அலட்சியம் செய்ய முடியாது இஸ்லாமிய சமூகம் ஒன்று பட்டால் உலகை வென்றெடுக்க முடியும் துருக்கி அதிபர் அர்துகான்...
கடந்த வாரம் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசிய துருக்கி அதிபர் பல முக்கிய விசயங்களை குறிப்பிட்டார். எந்த ஒரு முஸ்லிமி்ன் வலியையும் எந்த இஸ்லாமிய நாட்டின் கவலையையும் மறக்கவோ மறைக்கவோ என்னால் முடியாது. உலகின் வலுவான ஒரு சமூகமாக உள்ள இஸ்லாமிய சமூகம் கிலாபத் காலத்தில் இருந்தது போன்று ஒன்று பட்டு வலிமையுடன் இல்லாமல் இருப்பதினால் பல நாடுகள் முஸ்லிம்களை சீண்டுவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. உலக முஸ்லிம்களையும் இஸ்லாமிய நாடுகளையும் ஐநா என்ற பெயரில் இயங்கி கொண்டிருக்கும் ஐந்து நாடுகளின் கரத்தில் ஒப்படைக்க முடியாது. ஐநாவின் அமைப்பில் மாற்றம் வேண்டும். இஸ்லாமிய நாடுகளுக்கு மதிப்பு மிக்க பிரநிதித்துவம் ஐக்கிய நாட்டு சபையில் வேண்டும். இஸ்லாமிய வெறுப்பு பல நாடுகளில் பரவி வருகிறது. இதற்கு எதிரான கடுமையான நடவடிக்கைகள் உலக அளவில் தேவை. அதன் பகுதியாக மார்ச் 15 ஆம் நாளை உலக இஸ்லாமிய தினமாக அறிவித்து அந்த நாளில் இஸ்லாமிய வெறுப்பிற்கு எதிரான பிரச்சாரத்தை தீவிர படுத்து வேண்டும். இவைகளை எல்லாம் நமது ஒற்றுமையினால் தான் வென்றெடுக்க முடியும். அதற்கான அனைத்து முயர்ச்சிகளையும் துருக்கி அரசு எடுத்து வருகது. நாம் ஒன்றுபட்டால் உலகை நம்மால் மட்டுமே வெல்ல முடியும் இவ்வாறு அவரின் உரை அமைந்தது.