செயற்கைக்கோள்

செயற்கைக்கோள்
================



WRITE YOU COMMENTS


பொருளடக்கம்
===============

  • ஆரம்பகால கருத்துகள்
  • செயற்கைக்கோள்களின் வரலாறு
  • விண்வெளி கண்காணிப்பு வலையமைப்பு
  • கோளப் பாதைகளின் வகைகள்
  • செயற்கைக்கோள் வடிவமைப்பு
  • ஆயுள் முடிந்தவை
  • ஏவுகணை செலுத்தும் ஆற்றலைக் கொண்ட நாடுகள்
  • ஏவுகணையை செலுத்தும் ஆற்றல் கொண்ட தனியார் நிறுவனங்கள்
  • ஒவ்வொரு நாட்டின் முதல் செயற்கைக்கோள்கள்
  • செயற்கைக்கோள்கள் மீதான தாக்குதல்கள்
  • விண்கலங்களை உளவு பார்க்கும் அமெரிக்க செயற்கைகோள்
  • செயற்கைக்கோள் சேவைகள்


ஆரம்பகால கருத்துகள்
முதன் முதலாக செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டிருக்கிறது என்னும் செய்தி எட்வர்ட் எவெரெட் ஹேல் எழுதிய தி பிரிக் மூன் என்னும் கற்பனை சிறுகதையில் தான் வெளிவந்தது. 1869 ஆம் ஆண்டு துவங்கி இந்த கதை தொடராக தி அட்லாண்டிக் மன்த்லி , என்ற பத்திரிக்கையில் வெளிவந்தது. ஜூல்ஸ் வெர்ன் எழுதிய தி பேகம்'ஸ் பார்ச்யூன் என்ற நூலில் இந்த கற்பனை மீண்டும் எழுந்தது. (1879)

1903 ஆம் ஆண்டு, கோன்ஸ்டாண்டின் ட்சியோல்கோவ்ஸ்கை (1857–1935), தி எக்ச்ப்லோறேஷன் ஆப் காஸ்மிக் ஸ்பேஸ் பை மீன்ஸ் ஆப் ரியாக்க்ஷன் டிவைசஸ் என்ற ஆய்வறிக்கை நூலை ரஷ்ய மொழியில்: Исследование мировых пространств реактивными приборами ) பதிப்பித்தார். இது ஏவுகணையைக்கொண்டு எவ்வாறு விண்கலங்களை ஏவலாம் என்பதைப்பற்றி வெளிவந்த முதல் புத்தகமாகும்.இந்நூல் விண்வெளிக்கு மனிதன் செல்லவும் அங்கு அவனது செயல்கள் உணரப்படவும் ஒரு திட்டமாக விளங்கியது. அவர் ஒரு விண்வெளி நிலையத்தை கற்பனையாக மிக விவரமாக உண்டாக்கி அதனது நிலையான புவி கோளப் பாதையையும் கணக்கிட்டுள்ளார். அவர் கோளப்பாதையில் சுற்றிவரும் விண்கலங்களின் இராணுவ மற்றும் அமைதித்துவ முக்கியத்துவங்களை விளக்கியுள்ளார். அவர் விண்வெளி எவ்வாறு அறிவியல் பரிசோதனைகளுக்கு உதவி புரிகிறது என்பதைப்பற்றியும் விளக்கியுள்ளார். இந்த நூல் ட்சியோல்கோவ்ஸ்கை குறிப்பிட்ட ஒரே இடத்தில் புவியை சார்ந்து இருக்கும் செயற்கைக்கோள்களைப்பற்றி விவரிப்பதுடன், பூமியுடன் அவை எப்படி தகவல்களை பரிமாறுகின்றன என்பதைப்பற்றியும் குறிப்பிடுகின்றது. "இவை பெரியளவில் தொலைத்தொடர்பு கருவிகளாக பயன்படுத்தப்படலாம்" என்றும் இந்த நூல் குறிப்பிடுகின்றது.

1945 ஆம் ஆண்டு,கம்பியில்லா உலகம் என்ற ஆங்கில கட்டுரையில், அறிவியல் புதின ஆசிரியர் எழுத்தாளர் சி. கிளார்க் (1917-2008) பெருமளவு தொடர்பு கொள்ளுதலுக்கு தேவையான தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் பற்றி விவரிக்கிறார். கிளார்க் செயற்கைக்கோளை ஏவுதல், செயற்கைக்கோள்கள் சுற்றிவரக்கூடிய கோளப்பாதைகள், பூமியை சுற்றிவரும் செயற்கைக்கோள்களின் பின்னல் வலையமைப்பு உருவகம் மற்றும் மிக வேகமான தகவல் தொடர்பு கொள்ளுதலைப்பற்றி விவரிக்கிறார். புவியை முழுவதுமாக கண்காணிக்க மூன்று புவிநிலைச் சுற்றுப்பாதை செயற்கைக்கோள்கள் போதுமானவை என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


செயற்கைக்கோள்களின் வரலாறு
சோவியத் ஒன்றியம் அக்டோபர் 4, 1957 அன்று ஏவிய ஸ்புட்னிக் 1 தான் உலகின் முதல் செயற்கைக்கோளாகும். இந்த சோவியத் ஸ்புட்னிக் செயல்பாட்டு குழுவுக்கு தலைவராக இருந்தவர் செர்கே கொரோலெவ் மற்றும் அவருக்கு உறுதுணையாக இருந்தவர் கெரிம் கெரிமோவ்.[4] இதனால் சோவியத் ஒன்றியத்துக்கும் ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்கும் மத்தியில் விண்வெளி போட்டி மூண்டது.

உயரிய காற்று மண்டலங்களின் அடர்த்தியை கண்டறிய ஸ்புட்னிக் 1 உதவியாக இருந்தது. இது கோளப்பாதை மாற்றத்தின் வழியே கணக்கிடுதலை செய்தது. மேலும் அயன மண்டலத்தில் நிகழக்கூடிய ரேடியோ சைகைகளைக் கொண்டு பூமிக்கு தகவல்களை அனுப்புகின்றது. செயற்கைக்கோளில் அதிக அழுத்தம் கொண்ட நைட்ரஜன் இருந்ததால், ஸ்புட்னிக் 1 முதன் முதலில் எரிமீன்களை கண்டுபிடிக்கவும் உதவியாக இருந்தது. வெளி மேல்பரப்பில் எரிமீன்கள் நுழைவதினால் உள்ளுக்குள்ளே ஏற்படும் காற்றழுத்தக் குறைவினால் புவிக்கு அனுப்பப்படுகின்ற தட்பவெப்ப தகவல்களை அறியவும் உதவியாக இருந்தது. எதிர்பாராத ஸ்புட்னிக் 1-இன் வெற்றியைத்தொடர்ந்து அமெரிக்காவில் ஸ்புட்னிக் சர்ச்சை மூண்டது. இதனால் பனிப்போரின் போது விண்வெளி போட்டியும் தொடங்கியது.

ஸ்புட்னிக் 2 நவம்பர் 3, 1957 அன்று விண்ணில் ஏவப்பட்டது. இது உயிருடன் இருக்கும் ஒரு ஜீவனை அதாவது லைகா என்ற நாயை விண்வெளிக்கு முதன் முதலில் எடுத்துச் சென்றது.

மே, 1946 இல் ப்ராஜெக்ட் RAND வெளியிட்ட முதனிலை ஆய்வு விண்கல வடிவமைப்பு , "எல்லா வசதிகளையும் கொண்டுள்ள இந்த செயற்கைக்கோள் இருபதாம் நூற்றாண்டின் முக்கியத்துவம் வாய்ந்த அறிவியல் கருவியாகும்," என்ற செய்தியை வெளிக்கொண்டு வந்தது.[6] அமெரிக்க ஐக்கிய நாடுகளின் கப்பற்படையின் பியூரோ ஆப் ஏரோனாடிக்ஸ் மூலம் 1945 ஆம் ஆண்டு முதல் அமெரிக்க ஐக்கிய நாடுகள் கோளப்பாதை செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ முனைப்புடன் செயல்பட்டுவருகின்றன. அமெரிக்க ஐக்கிய நாடுகளின் விமானப்படையின் ப்ராஜெக்ட் RAND இந்த அறிக்கையை வெளியிட்டாலும், அது இராணுவ ஆயுதமாக செயற்கைக்கோளை பயன்படுத்தலாம் என்பதை நம்பவில்லை. செயற்கைகோளை அறிவியல்,அரசியல் மற்றும் செய்தி பரப்புதலுக்கு உதவி புரியும் ஒரு நல்ல கருவியாக கருதியது. இதற்கிடையில் 1954-ம் ஆண்டு பாதுகாப்பு அமைச்சர், "எனக்கு அமெரிக்காவின் செயற்கைக்கோள் திட்டம் பற்றி ஒன்றும் தெரியாது",என்று கூறினார்.

ஜூலை 29, 1955 அன்று அமெரிக்கா 1958-ம் ஆண்டு வசந்த காலத்தில் செயற்கைக்கோளை ஏவப்போவதாக வெள்ளை மாளிகை அறிவித்தது. இதனை ப்ராஜெக்ட் வான்கார்ட் என்று அழைத்தனர். ஜூலை 31 அன்று சோவியத் நாட்டினர் 1957-ஆம் ஆண்டின் இலையுதிர் காலத்துக்கு முன்பாக செயற்கைக்கோளை ஏவப்போவதாக அறிக்கை விடுத்தனர்.

அமெரிக்க ஏவுகணை கழகம், தேசிய அறிவியல் நிறுவனம், மற்றும் உலகப் புவிப்பௌதிக ஆராய்வாண்டு ஆகிவற்றின் வற்புறுத்தலினால் இராணுவ ஆர்வம் அதிகரித்தது. 1955-ம் ஆண்டின் ஆரம்ப காலங்களில் விமான மற்றும் கப்பல் படைகள் ப்ராஜெக்ட் ஆர்பிட்டரில் செயல்பட துவங்கின. இது செயற்கைக்கோளை விண்ணில் ஏவ ஜூபிடர் சி ராக்கெட்டை பயன்படுத்தியது. இந்த செயல்பாடு வெற்றியடைந்ததை தொடர்ந்து 1958 ஆமாண்டு ஜனவரி மாதம் 31-ம் நாள் அன்று விண்ணில் ஏவப்பட்ட எக்ஸ்ப்ளோரர் 1 அமெரிக்காவின் முதல் செயற்கைக்கோளாக அறிவிக்கப்பட்டது.

விண்ணில் ஸ்புட்னிக் 1 ஏவப்பட்ட மூன்றரை ஆண்டுகளுக்கு பிறகு, ஜூன் 1961 இல் அமெரிக்க ஐக்கிய நாடு விண்வெளி கண்காணிப்பு வலையமைப்புடன் இணைந்து பூமியை சுற்றிவரும் 115 செயற்கைக்கோள்களை ஐக்கிய நாட்டு விண்வெளி கண்காணிப்பு வலையமைப்பு பட்டியல் இட்டுள்ளது.


விண்வெளி கண்காணிப்பு வலையமைப்பு
யுனைடட் ஸ்டேட்ஸ் ஸ்பேஸ் சர்வெயிலன்ஸ் நெட்வொர்க் (எஸ்எஸ்என்) 1957 ஆம் ஆண்டு முதல் விண்ணில் இருக்கின்ற பொருட்களை கண்டறிந்து அவற்றை கண்காணிக்க அமைக்கப்பட்டது. சோவியத் நாட்டினர் விண்வெளி காலத்தை ஸ்புட்னிக்கை ஏவியதன் மூலம் துவக்கினர். அன்று முதல் எஸ்எஸ்என் பூமியை சுற்றி 26,000 க்கும் மேற்பட்ட விண்தட்டுக்களைக் கண்டுபிடித்துள்ளது. தற்சமயம், எஸ்எஸ்என் மனிதனால் உண்டாக்கப்பட்ட 8,000 க்கும் மேற்பட்ட கோளப்பாதை சுற்றும் விண்தட்டுக்களை கண்டுபிடித்துள்ளது. மீதமுள்ள செயற்கைக்கோள்கள் புவியின் காற்றுமண்டலத்தின் வாயிலாக நுழையும் பொழுது உருக்குலைந்து போயுள்ளன அல்லது நுழையும் பொழுது தாக்கம் இன்றி உள்ளே வந்து பூமியின் மீது தாக்கத்தை உண்டு பண்ணியுள்ளன. பூமியைச் சுற்றிவரும் விண்வெளி பொருட்களில் அதிக எடைகொண்டுள்ள செயற்கைக் கோள்கள் மற்றும் 10 பவுண்ட் எடையை கொண்டுள்ள ராக்கெட்களும் சேரும். விண்வெளியில் இருக்கின்ற செயற்கைக்கோள்களில் ஏழு சதவீதம் வேலை செய்யும் நிலையில் இருக்கின்றன.(i.e. ~560 செயற்கைக்கோள்கள்), மீதி இருப்பன விண்வெளி குப்பையாகும். USSTRATCOM செயல்பாட்டில் இருக்கின்ற செயற்கைக்கோள்களை கண்காணிப்பதுடன் அது விண்வெளி குப்பையையும் கண்காணிக்கிறது. இல்லையேல், இந்த குப்பை பூமிக்கு திரும்ப வரும்போது ஏவுகணை என்று தவறாக எடுத்துக்கொள்ளப்படலாம். எஸ்எஸ்என் பத்து சென்டிமீட்டர் வட்டக் குறுக்களவு கொண்ட விண்வெளி பொருட்களையும் (பேஸ் பால் அளவு) அல்லது அதை விட பெரிதாக இருக்கும் பொருட்களையும் கண்காணிக்க உதவுகிறது.


கோளப் பாதைகளின் வகைகள்
முதல் செயற்கைக்கோளான, ஸ்புட்னிக் 1, பூமியைச் சுற்றி இருக்கும் கோளப் பாதையில் செலுத்தப் பட்டிருந்தது. அந்த கோளப்பாதை ஜியோசென்ரிக் ஆர்பிட் என்று அழைக்கப்படுகிறது. பூமியை சுற்றி இருக்கும் இந்த கோளப்பதையில் கிட்ட தட்ட 2456 செயற்கைக்கோள்கள் வலம் வருகின்றன . மேலும் இந்த ஜியோசென்ட்ரிக் ஆர்பிட்கள் அவற்றின் உயரம், சாயளவு மற்றும் உருவகத்தைப் பொருத்து வகைப்படுத்தலாம்.

உயரத்தை வைத்து இவற்றை புவியின் கீழ் இருக்கும் கோளப் பாதை (LEO), மத்தியப் புவி கோளப்பாதை (எம்இஒ ) , உயரிய புவி கோளப் பாதை (ஹெச்இஒ) என்று வகைப்படுத்தப்படுகின்றன. 2000 கி.மீ.குறைவாக இருப்பது எதுவாக இருந்தாலும் அது கீழ்நிலை கோளப் பாதையாகும், மத்திய நிலை கோளப் பாதை என்பது அதைவிட உயரத்தில் இருப்பது ஆனால் 35786 கி.மீ. உயரத்தில் இருக்கும் ஜியோ சின்க்ரோனஸ் கோளப் பாதையை விடக் குறைவாக உள்ளது. உயரிய கோளப்பாதை என்பது, ஜியோ சின்க்ரோனஸ் கோளப் பாதையை விட உயர்ந்து இருக்கும் எந்தவொரு கோளப்பாதையும் ஆகும்.


செயற்கைக்கோள் வடிவமைப்பு
செயற்கைக்கோளின் செயலாக்கம் அதன் நுட்பமான பகுதிகள் மீதும் அதன் செயல்பாட்டு பண்புகள் மீதும் பலமான அடித்தளம் கொண்டு வருகின்றது. செயற்கைக்கோளின் உறுப்புகளை கொண்டு பார்க்கையில் அதனை இரண்டு வகைப்படுத்தலாம் என்று தெரிய வருகிறது. ஆனால் புதிதாக கட்டிட கலையை கொண்டு தோன்றியிருக்கும் பிராக்ஸ்னேடட் ஸ்பேஸ்கிராப்ட் போன்ற கோட்பாடுகள் இந்த கருத்தை பொய் என்று சொல்கின்றன.

ஸ்ட்ரக்சுரல் உள்ளமைப்புகள்
இவ்வகை உள்ளமைப்புகள் செயற்கைக்கோளின் எந்திர அடிப்படை அமைப்புகளை விவரிப்பதுடன், செயற்கைக்கோளைப் பாதிக்கும் தட்ப வெப்ப நிலையில் இருந்தும் காக்கின்றன. மேலும் செயற்கைக்கோள்கள் சுழலுவதை மேற்பார்வை இடுவதுடன் இந்த வகை சிறு அளவில் எரி நட்சத்திரங்களால் ஏற்படும் பாதிப்புகளையும் சரி செய்கின்றன.


தொலைக்கணிப்பு உள்ளமைப்புகள் (அல்லது தகவல் மற்றும் உத்தரவை பின்பற்றுதல்)

செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டுள்ள சிறு சிறு எந்திரங்களைக் கண்காணிப்பது, அங்கு வேலை செய்கின்ற எந்திரங்களில் இருந்து பெரும் தகவல்களை பூமிக்கு அனுப்புதல் பூமியில் இருக்கும் நிலையத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்தல் புவியில் இருக்கும் நிலையத்தில் இருந்து தகவல் பெறுதல், அதைக்கொண்டு அங்கிருக்கும் எந்திரங்களை இயக்குதல் போன்ற வேலைகளை இந்த அமைப்பு செய்கின்றது.

பவர் உள்ளமைப்புகள்
பூமியின் நிழலில் வலம் வரும்பொழுது சூரிய வெளிச்சத்தை உள்ளிழுக்கும் பானல்கள் மற்றும் ஆபத்துக்காலத்தில் உதவும் மின்கல அடுக்குகள் மூலம் உற்பத்தியாகும் மின்சாரம் மூலம் இந்த அமைப்புகள் இயங்குகின்றன. அணு மின்சார மூலங்களை (ரேடியோ ஐசோடாப் தெர்மோஎலெக்ட்ரிக் ஐசோடாப் ) கொண்டு பல வெற்றிகரமான செயற்கைக்கோள்கள் உண்டாக்கப்பட்டுள்ளன.அதில் நிம்பஸ் திட்டமும் ஒன்று (1964-1978).

தெர்மல் கட்டுப்பாட்டு உள்ளமைப்புகள்
செயற்கைக்கோள்களில் இருக்கும் மின்சார எந்திரங்களை அதிகபடியான தட்ப வெப்ப நிலைகளில் இருந்தும் அதிகமான சூரிய வெளிச்சத்தில் வெளிபடுவதில் இருந்தும் பாதுகாப்பதில் தெர்மல் கட்டுப்பாட்டு உள்ளமைப்புகள் உதவுகின்றன.(எ.கா. ஆப்டிகல் சோலார் ரிப்லேக்டார்)

திசையமைவு மற்றும் ஆர்பிட்டால் கட்டுப்படுத்தப்படும் உள்ளமைப்புகள்
இவற்றில் சிறிய ராக்கெட் புச்டேர்கள் பொருத்தப்பட்டுள்ளதால் செயற்கைக்கோள்களை சரியான இடத்தில் நிலையாக வைத்துக்கொள்ள உதவுவதிலும் சரியான திசையில் நகரவும் உதவி புரிகின்றன.


ஆயுள் முடிந்தவை
செயற்கைக்கோள்கள் தங்கள் இலக்குகளை அடையும் பொழுது அவற்றை விண்ணில் செலுத்தியவர்கள் கோளப்பாதையில் இருந்து நீக்கவும் செய்யலாம் அல்லது சுடுகாட்டு கோளப் பாதைக்கு நகர்த்தவும் செய்யலாம். ஆரம்ப காலங்களில் போதிய பொருளாதார வசிதிகள் இல்லாததினால் செயற்கைக்கோள்கள் தங்கள் பாதைகளில் இருந்து நீக்கப்படவில்லை. அவ்வாறு கூறப்படுகின்ற எடுத்துகாட்டு:வான்கார்ட் 1. 1958 ஆம் ஆண்டு செலுத்தப்பட்ட வான்கார்ட் 1, மனிதனால் தயாரிக்கப்பட்ட நான்காவது செயற்கைக்கோளாகும். இது புவியை மையமாக கொண்ட கோளப்பாதையில் வைக்கப்பட்டிருந்தது. ஆகஸ்ட் 2009 வரை இந்த செயற்கைக்கோள் அங்கு தான் இருந்தது.

இந்த செயற்கைக்கோள்கள் முழுவதுமாக நீக்கப்படாமல் தங்களது கோளப்பாதையிலேயே விட்டுவிடப்படுகின்றன. சமயங்களில் இவை சுடுகாட்டு கோளப் பாதைக்கு நகர்த்தப்படுகின்றன. 2002 வருடம் எப்சிசி , எல்லா புவிசார்ந்த செயற்கைக்கோள்களும் தமது இலக்கை அடைந்தவுடன் தாமாகவே சுடுகாட்டுக் கோளப் பாதைக்கு நகர்ந்துவிட வேண்டும் என்று தெரிவித்து உள்ளது.


ஏவுகணை செலுத்தும் ஆற்றலைக் கொண்ட நாடுகள்

விண்வெளியில் ஏவுகணை செலுத்த மற்றும் அவற்றை தயாரிக்கும் ஆற்றலை கொண்ட நாடுகளின் அட்டவணை. குறிப்பு: செயற்கைக்கோளை தயாரிக்கும் ஆற்றல் இப்பொழுது நிறைய நாடுகளுக்கு இருக்கிறது. இதற்கு ஏராளமான பொருளாதார, அறிவியல் மற்றும் தொழிற்முறை வசதிகள் தேவையில்லை. ஆயினும் இவை வெளிநாட்டு உதவிகளை எதிர்பார்ப்பதினால் இவற்றால் செயற்கைக்கோள்களை ஏவ முடிவதில்லை. கீழ் உள்ள அட்டவணையில் ஆற்றல் இல்லாத நாடுகள் குறிப்பிடப்படவில்லை. ஏவுகணைகளை செலுத்தும் ஆற்றலை கொண்டுள்ள நாடுகளின் பெயர்கள் மட்டும் தான் குறிப்பிடப்பட்டுள்ளன. எந்த நாளில் செலுத்தப்பட்டன போன்ற தகவல்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. கொன்சொர்டியம் செயற்கைக்கோள்கள் மற்றும் பல நாட்டு செயற்கைக்கோள்களின் பட்டியல் இது அல்ல.

வெவ்வேறு நாடுகளின் முதல் ஏவுதல்
வரிசைமுதல் ஏவுதல் நடந்த ஆண்டுநாடுஏவுகணைசெயற்கைக்கோள்
1 சோவியத் ஒன்றியம்1957ஸ்புட்னிக்-PSஸ்புட்னிக் 1
2 ஐக்கிய அமெரிக்கா1958ஜூனோ Iஎக்ஸ்ப்ளோரர் 1'
3 பிரான்சு1965டைமண்ட்ஆஸ்டரிக்ஸ்
4 சப்பான்1970லாம்ப்டா-4Sஓசுமி
5 சீனா1970லாங் மார்ச் 1டாங் பாங் ஹாங் I
6 உக்ரைன்[1]1971ப்ளாக் ஆரோபரோஸ்பேரோ X-3
7 இந்தியா1980SLVரோகினி
8 இசுரேல்1988சாவித்ஒபெக் 1
- உருசியா[1]1992சோயுஸ்-Uவார்ப்புரு:கொஸ்மொஸ்
- உக்ரைன்[1]1992சைக்ளோன்-3ஸ்ட்ரேலா (x3, ருசியா)
9 ஈரான்2009சாபிர்-2ஓமிட்

ஏவுகணையை செலுத்தும் ஆற்றல் கொண்ட தனியார் நிறுவனங்கள்
செப்டம்பர் 28, 2008 அன்று ஸ்பேஸ்எக்ஸ் என்ற தனியார் விண்வெளி விண்கல நிறுவனம் விண்ணில் பாலகன் 1 என்ற செயற்கைக்கோளை வெற்றிகரமாக செலுத்தியது. முதல் முறையாக தனிப்பட்ட முறையில் உருவாக்கப்பட்ட நீரியலான எரிபொருளை கொண்டு இயங்கிய பூஸ்டர்கள் வானில் செலுத்தப்பட்டன. இந்த ஏவுகணை 1.5 m (5 ft) அளவிலான முக்கோண வடிவில் இருந்த ஒரு நீளமான மாதிரி செயற்கைக்கோளை விண்வெளிக்கு எடுத்து சென்றது. ராட்சாட் என்ற இந்த மாதிரி செயற்கைக்கோள் விண்வெளியில் ஐந்து அல்லது பத்து வருடங்களுக்கு இருக்கும், அதன் பிறகு அது காற்றுமண்டலத்தில் எரிந்து சாம்பலாகிவிடும்.


ஒவ்வொருநாட்டின் முதல் செயற்கைக்கோள்கள்
செயற்கைக் கோள்களை ஏவுவதில் கனடா மூன்றாவது நாடாகும் யு.எஸ். விண்வெளி நிலையத்தில் இருந்து யு.எஸ். ஏவுகணையை கொண்டு செலுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவும் இதே போல் தனக்கு தானம் அளிக்கப்பட ரெட்ஸ்டோன் ஏவுகணையில் இருந்து தான் செலுத்தியுள்ளது இத்தாலியர்கள் செலுத்திய முதல் செயற்கைக்கோள் சான் மார்கோ 1, இது டிசம்பர் 15, 1964 அன்று யு.எஸ். ஸ்கவுட் ஏவுகணையில் வாலப்ஸ் தீவில் இருந்து (விஎ,யுஎஸ்ஏ) செலுத்தப்பட்டது. இதனை ஏவியது ஒரு இத்தாலிய குழுவாக இருந்தாலும் அதற்கு பயிற்சி அளித்தது நாசா. யுஎஸ் ஏவுகணை, யுஎஸ் ஆதரவு குழு மற்றும் யு.கே ஏவுதல் குழுவின் உதவியோடு (WRESAT)ஐ ஆஸ்திரேலியா ஏவியுள்ளது.

செயற்கைக்கோள்கள் மீதான தாக்குதல்கள்

தற்காலத்தில் தீவிரவாத கும்பல்களினால் செயற்கைக்கோள்கள் ஊடுருவப்படுகின்றன. தீவிரவாதிகளின் கொள்கைகளைப்பரப்புவதற்கு இது எளிய முறையாக இருக்கிறது. ராணுவத்தில் இருந்து முக்கியமான தகவல்களை ரகசியமாக பெறவும் தீவிரவாதிகள் இதனை பயன்படுத்துகிறார்கள்.


பூமியில் இருந்து செலுத்தப்படுகின்ற ஏவுகணைகள் கீழ் புவி கோளப்பாதைகளில் இருக்கும் செயற்கைக்கோள்களை தாக்கியுள்ளன. ருசியா, ஐக்கிய அமெரிக்க நாடுகள், சீனா போன்ற நாடுகள் செயற்கைக்கோள்களை அழிக்கும் ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளன. 2007 ஆம் ஆண்டு சீன இராணுவம் பழைய வானிலை செயற்கைக்கோளை தகர்த்துள்ளது. இதனை தொடர்ந்து யுஎஸ் கப்பல் படை, செயல் இழந்த உளவு செயற்கைக்கோளை 2008 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தகர்த்துள்ளது.


விண்கலங்களை உளவு பார்க்கும் அமெரிக்க செயற்கைகோள்
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திலுள்ள கேப்கேனரவல் விண்வெளி மையத்தில் இருந்து செலுத்தப்பட்ட ’டெல்டா 4’ ராக்கெட்டை யுனைட்டட் ஏலியன்ஸ் அமெரிக்க நிறுவனம் லாக்கீட் அண்ட் போயிங் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்தது. இந்த ராக்கெட்டில் இரண்டு செயற்கை கோள்கள் அனுப்பப்பட்டன. மற்ற நாடுகளின் விண்வெளிக்கலங்கள், செயற்கைக்கோள்கள் ஆகியவற்றையும் அவற்றின் செயல்பாடுகளையும் துல்லியமாக உளவு பார்ப்பதற்காக இவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.


செயற்கைக்கோள் சேவைகள்

1). செயற்கைக்கோள் இணைய தள சேவை
2). செயற்கைக்கோள் தொலைபேசி
3). செயற்கைக்கோள் வானொலி
4). செயற்கைக்கோள் தொலைகாட்சி
5). செயற்கைக்கோள் ஒட்டுதல்